”எதிர்க்கட்சித் தலைவருக்கும் எமக்குமிடையில் எவ்வித கருத்து முரண்பாடுகளும் இல்லை”

”எதிர்க்கட்சித் தலைவருக்கும் எமக்குமிடையில் எவ்வித கருத்து முரண்பாடுகளும் இல்லை”

எழுத்தாளர் Bella Dalima

06 May, 2016 | 8:23 pm

எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமக்குமிடையில் எவ்வித கருத்து முரண்பாடுகளும் இல்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே முதலமைச்சர் இதனைக் கூறினார்.

யாழ்ப்பாண மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்ற ஆசிரியர் மாநாட்டில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டிருந்தார்.

இந்த மாநாட்டின் பின்னர் எதிர்க்கட்சித்தலைவருடன் முரண்பாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்,

[quote]எதிர்க்கட்சித் தலைவருக்கும் எமக்குமிடையில் எவ்வித கருத்து முரண்பாடுகளும் இல்லை. வட மாகாண அமைச்சர்கள், அவைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் விரைவில் கொழும்புக்கு சென்று எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்கவுள்ளோம். இந்த சந்திப்பின் போது வட மாகாண சபையால் தயாரிக்கப்பட்டுள்ள தீர்வுத் திட்ட வரைபும் எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிக்கப்படவுள்ளது.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்