விடுதலைப் புலிகளின் தொப்பியொன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரிக்கப்பட்டது

விடுதலைப் புலிகளின் தொப்பியொன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரிக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

04 May, 2016 | 7:38 pm

தமிழீழ விடுதலைப் புலிகளின் தொப்பியொன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நாராஹேன்பிட்டியில் இருந்து லண்டனுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த போது கடந்த ஏப்ரல் மாதம் விடுதலைப் புலி இயக்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் பயன்படுத்திய தொப்பியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் எடுத்து நடத்துவதற்கு நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்த போதிலும், பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, இந்த வழக்கு இம்மாதம் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டதுடன், சந்தேகநபர்கள் இருவரும் அதுவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் 16 பேர் கொழும்பு நீதவான் அருனி ஆட்டிகல முன்னிலையில் இன்று மீண்டும் சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த கைதிகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல்கள் வரும் வரை அவர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கமைய, 16 தமிழ் அரசியல் கைதிகளின் விளக்கமறியல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்