பேராதனை, கண்டிக்கிடையில் ரயில் பஸ் சேவை

பேராதனை, கண்டிக்கிடையில் ரயில் பஸ் சேவை

பேராதனை, கண்டிக்கிடையில் ரயில் பஸ் சேவை

எழுத்தாளர் Staff Writer

04 May, 2016 | 9:04 am

பேராதனை மற்றும் கண்டி நகரங்களுக்கு இடையில் ரயில் பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கண்டி நகரை அண்மித்த பிரதேசங்களில் நிலவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் இந்த சேவை ஆரம்பிக்கபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பேராதனை கண்டி நகரங்களுக்கிடையில் நாள் முழுவதும் இந்த சேவை முன்னெடுக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் காலங்களில் இந்த சேவையை கடுகண்னாவ வரை விஸ்தரிப்பதற்கு நடவடிக்ைக எடுக்கப்படும் எனவும் ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்