பாராளுமன்ற ​மோதல் விவகாரம்; இன்று சபாநாயகருக்கு அறிக்கை சமர்பிப்பு

பாராளுமன்ற ​மோதல் விவகாரம்; இன்று சபாநாயகருக்கு அறிக்கை சமர்பிப்பு

பாராளுமன்ற ​மோதல் விவகாரம்; இன்று சபாநாயகருக்கு அறிக்கை சமர்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

04 May, 2016 | 7:24 am

பாராளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட மோதல் தொடர்பிலான அறிக்கை இன்று நண்பகல் சபாநாயகருக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இந்த மோதல் தொடர்பில் ஊடகங்களில் வௌியான நிழற்படங்கள் மற்றும் காணொளிகளை அடிப்படையாக கொண்டு அதனை பரீசீலித்து இந்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோதலுடன் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று இரவு முழுவதும் இந்த விடயம் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டதாக பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் இந்த அறிக்கையை இன்று நண்பகல் 12 மணியளவில் சபாநாயகருக்கு ஒப்படைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இராணுவ பாதுகாப்பு அகற்றப்பட்டமை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட போது இந்த மோதல் ஏற்பட்டதுடன் மோதலில் காயமடைந்த ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் சந்தித் சமரசிங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்