நிரந்தர நியமனம் கோரி கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதம்

நிரந்தர நியமனம் கோரி கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Staff Writer

04 May, 2016 | 1:37 pm

நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி சுழற்சி முறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள், ஆளுனர் அலுவலகம் நோக்கி செல்ல முற்பட்ட போது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பல வருடங்களாக ஊதியமின்றி பணியாற்றிவரும் கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள், நிரந்தர நியமனம் கோரி 11ஆவது நாளாக இன்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கு முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தொண்டர் ஆசிரியர்கள், ஆளுனர் அலுவலகம் நோக்கி செல்ல முற்பட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகள் ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆளுனர் அலுவலகம் நோக்கி செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதனையடுத்து மீண்டும் மாகாண கல்வியமைச்சுக்கு முன்பாக சென்ற கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்