தீவிரவாதிகளுக்கு பயந்து பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள மெஸ்ஸியின் 5 வயது ரசிகன்

தீவிரவாதிகளுக்கு பயந்து பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள மெஸ்ஸியின் 5 வயது ரசிகன்

தீவிரவாதிகளுக்கு பயந்து பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள மெஸ்ஸியின் 5 வயது ரசிகன்

எழுத்தாளர் Bella Dalima

04 May, 2016 | 3:45 pm

கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான் மெஸ்ஸியின் தீவிர ரசிகனான 5 வயது சிறுவன் முர்டஸா அகமதியின் குடும்பம் தற்போது பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் காபூல் நகர் அருகே ஜகோரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் முர்டஸா அகமதி.

5 வயது சிறுவனான அகமதி, பிளாஸ்டிக் பையால் ஆன மெஸ்ஸியின் ஜெர்சியை அணிந்து விளையாடுவது போன்ற புகைப்படங்கள் சமூக இணையத்தளங்களில் வைரலாகின.

இதனையடுத்து, மெஸ்ஸியை நேரடியாக சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், மெஸ்ஸி தான் கையெழுத்திட்ட கால்பந்து மற்றும் ஜெர்சியை அகமதிக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், அகமதி தனது குடும்பத்தினருடன் தற்போது பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளான்.

இணையத்தளங்களில் அகமதி பிரபலமடைந்துவிட்டதால், தீவிரவாதிகளால் அவனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என கருதி பாகிஸ்தானில் தஞ்சமடைந்ததாக அகமதியின் தந்தை கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்