டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவது உறுதி; போட்டியிலிருந்து விலகினார் டெட் குருஸ்

டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவது உறுதி; போட்டியிலிருந்து விலகினார் டெட் குருஸ்

டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவது உறுதி; போட்டியிலிருந்து விலகினார் டெட் குருஸ்

எழுத்தாளர் Staff Writer

04 May, 2016 | 10:34 am

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட ஆதரவு திரட்டிவந்த முக்கிய வேட்பாளரான டெட் குரூஸ் போட்டியில் இருந்து விலகியதால் அக்கட்சியின் சார்பில் பிரபல தொழிலதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது உறுதியாகி விட்டது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்க எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரதான வேட்பாளரை தேர்வு செய்ய அந்நாட்டில் உள்ள 50 மாநிலங்களில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், இந்தியானா மாநிலத்தில் இன்று குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்தல் நடைபெற்றது. அக்கட்சியை சேர்ந்த மாநில மாவட்ட பிரதிநிதிகள் இந்த தேர்தலில் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கையில், டொனால்ட் ட்ரம்ப் 52 சதவீதம் வாக்குகளை வாங்கி அமோக வெற்றி பெற்றார். அவரது போட்டியாளரும் டெக்சாஸ் மாநில எம்.பி.யுமான டெட் குருஸ் 16 சதவீதம் வாக்குகளை வாங்கி பின்தங்கினார்.

குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக தகுதிபெற மொத்தம் 1237 வாக்குகள் தேவை என்ற நிலையில், இந்தியானா மாநிலத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அதிக ஆதரவை பெற்றுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார்.

1237 எனும் மொத்த எண்ணிக்கையை எட்ட இன்னும் 200 வாக்குகளே தேவை என்ற நிலையில் ட்ரம்ப் தற்போது உள்ள நிலையில், இந்தியானா மாநிலத்தில் ஏற்பட்ட தோல்வியையடுத்து, ஜகாதிபதி வேட்பாளர் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக இரண்டவாது இடத்திலுள்ள டெட் குருஸ் இன்று திடீரென அறிவித்துள்ளார். இதனால், டொனால்ட் ட்ரம்ப்பின் கை ஓங்கியுள்ளது.

இனிமேல் ஆதரவு வாக்குப்பதிவை சந்திக்கவுள்ள மேலும் சில மாநிலங்களிலும் டொனால்ட் ட்ரம்ப் அதிகமான வாக்குகளை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயகக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் நேருக்குநேர் மோதிக் கொள்வது இப்போதே உறுதியாகி விட்டதாக அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

டொனால்ட் ட்ரம்ப், சுமார் பத்துமாதங்களுக்கு முன்னர்தான் அரசியலில் நுழைந்தார், என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்