ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணி

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணி

எழுத்தாளர் Bella Dalima

04 May, 2016 | 9:54 pm

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியல் சூழலில் தமிழ் மக்களின் அரசியல் நிலைமைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகளை உரிய முறையில் அணுகும் வகையில் மாற்று தலைமைத்துவத்தை வழங்குவதற்காக இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணி, ஜனநாயக மக்கள் காங்கிரஸ், சிறி ரெலோ, ஈழ புரட்சி அமைப்பு, ஈழ விடுதலை அமைப்பு, தமிழ் மக்கள் அமைப்பு, ஜனநாயக போராளிகள் கட்சி, சர்வதேச இந்து குருமார் அமைப்பு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனநாயக மறுசீரமைப்புக்கான இயக்கம் ஆகியன இந்த புதிய அரசியல் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

பம்பலப்பிட்டியவில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்