சீனாவில் 31 விரல்களுடன் பிறந்த குழந்தை: சிகிச்சைக்கு உதவுமாறு பெற்றோர் கோரிக்கை

சீனாவில் 31 விரல்களுடன் பிறந்த குழந்தை: சிகிச்சைக்கு உதவுமாறு பெற்றோர் கோரிக்கை

சீனாவில் 31 விரல்களுடன் பிறந்த குழந்தை: சிகிச்சைக்கு உதவுமாறு பெற்றோர் கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

04 May, 2016 | 3:28 pm

சீனாவில் கைகளில் 15 விரல்களுடனும் கால்களில் 16 விரல்களுடனும் பிறந்துள்ள குழந்தை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

குழந்தைக்கு ஒரு கையில் 8 விரல்களும் மற்றொரு கையில் 7 விரல்களும் உள்ளன. மொத்தமாக 31 விரல்களுடன் பிறந்துள்ள தமது ஆண் குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை செய்வதற்கு உதவி வழங்குமாறு பெற்றோர் கோரியுள்ளனர்.

இதுபோன்று அதிக விரல்களுடன் ஆயிரத்தில் ஒரு குழந்தை பிறப்பதாக சீன மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் தாய்க்கும் இது போன்று கை மற்றும் கால்களில் அதிக விரல்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே, மரபு வழியாக குழந்தைக்கும் அதிக அளவில் விரல்கள் உருவாகி இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிக விரல்களுடன் குழந்தை வளர்கையில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் அவற்றை சிகிச்சை மூலம் சீரமைக்க மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஆனால், குழந்தையின் தந்தை மிகவும் ஏழ்மையானவர் என்பதால் சிகிச்சைக்கான செலவுகளுக்கு உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

hong_hong_2-large_trans++gsaO8O78rhmZrDxTlQBjdO0Jyi0jPPD6Zx1hiwTPhlc


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்