கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

எழுத்தாளர் Bella Dalima

04 May, 2016 | 5:51 pm

முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல சார்பாக ஆஜராகும் சட்டத்தரணி மன்றில் பிரசன்னமாகாத காரணத்தினால் வழக்கை ஒத்திவைப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்தது.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு நட்டம் ஏற்படும் வகையில், 9 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான ஜீ.ஐ. குழாய்களைக் கொள்வனவு செய்தமை குறித்து பிரதிவாதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரான விமல் ரூபசிங்க மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகே ஆகியோர் இந்த வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்