கச்சதீவை மீட்டுத்தருவதாக தி.மு.க கூறுகின்றமை ஏமாற்றும் செயல் – சீமான்

கச்சதீவை மீட்டுத்தருவதாக தி.மு.க கூறுகின்றமை ஏமாற்றும் செயல் – சீமான்

கச்சதீவை மீட்டுத்தருவதாக தி.மு.க கூறுகின்றமை ஏமாற்றும் செயல் – சீமான்

எழுத்தாளர் Staff Writer

04 May, 2016 | 1:41 pm

கச்சதீவை மீட்டுத்தருவதாக திராவிட முன்னேற்ற கழகம் கூறுகின்றமை ஏமாற்றும் செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஏற்பாட்டாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் கச்சத்தீவு தொடர்பில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் தமக்கான தீர்வினை தமிழக அரசியல் கட்சிகள் பெற்றுத் தருமென்ற நம்பிக்கையுடன் இலங்கை தமிழர்கள் இருப்பதாகவும் சீமான் கூறியுள்ளார்.

கச்சத்தீவை மீட்பது என்பது ஏமாற்று வேலையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கச்சத்தீவை மீட்டுத்தருவதாக திராவிட முன்னேற்ற கழகம் தனது தேர்தல் அறிக்கையூடாக கூறியிருப்பது, ஒரு கபட நாடகமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான நடிகருமான சரத் குமார் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசார கூட்டடொன்றிலேயே அவர் நேற்று கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்