எம்பிலிப்பிட்டிய முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

எம்பிலிப்பிட்டிய முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

எம்பிலிப்பிட்டிய முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

04 May, 2016 | 12:16 pm

எம்பிலிப்பிட்டியவின் முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.டப்ள்யூ.சீ.தர்மரட்ணவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எம்பிலிப்பிட்டிய நகரில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இளைஞரின் மரணம் தொடர்பில் இடம்பெற்ற இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக மேலதிக நீதவான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதலாம் மற்றும் இரண்டாம் பிரேத பரிசோதனை அறிக்கைகளுக்கு இடையிலான வித்தியாசங்களை தௌிவுப்படுத்துமாறு பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை வழக்கின் மேலதிக விசாரணைக​ள் தொடர்பில் நீதவான் ஆலோசனை பெற்றுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்