இங்கிலாந்து மண்ணில் இலங்கை அணி பொறுப்புடன் விளையாடும் – சனத் ஜயசூரிய

இங்கிலாந்து மண்ணில் இலங்கை அணி பொறுப்புடன் விளையாடும் – சனத் ஜயசூரிய

இங்கிலாந்து மண்ணில் இலங்கை அணி பொறுப்புடன் விளையாடும் – சனத் ஜயசூரிய

எழுத்தாளர் Bella Dalima

04 May, 2016 | 10:13 pm

இங்கிலாந்தில் காலநிலை சவாலாக இருந்தாலும் கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாக இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார்.

இங்கிலாந்து மண்ணில் இலங்கை அணி பொறுப்புடன் விளையாடும் என தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய குறிப்பிட்டார்.

3 டெஸ்ட், 5 சர்வதேச ஒருநாள் மற்றும் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் இன்று இங்கிலாந்து நோக்கிப் பயணமானது.

அதற்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று காலை நடைபெற்ற சமய வழிபாடுகளில் இலங்கை குழாத்தினர் கலந்துகொண்டனர்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 19 ஆம் திகதி லீட்ஸில் ஆரம்பமாகவுள்ளதுடன் அதற்கு முன்னர் இரண்டு பயிற்சிப் போட்டிகளில் இலங்கை விளையாடவுள்ளது.

டெஸ்ட் தரவரிசையில் இலங்கை ஏழாம் இடத்திலும் இங்கிலாந்து நான்காம் இடத்திலும் உள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்