ஹட்டனில் மே தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

ஹட்டனில் மே தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

ஹட்டனில் மே தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

01 May, 2016 | 11:33 am

மே தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹட்டன் நகரில் கவனயீரப்புப் போராட்டம் முன்னெடுக்ககப்பட்டுள்ளது.

மலையக சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாள் சம்பளம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும், தொழிலாளர்களுக்கான சலுகைகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தங்களின் கோரிக்கைகளுக்கு பதில் வழங்கா பட்சத்தில் மலையகம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டங்கள் ஆரம்பிக்கப்படும் எனவும் இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

8af68e8d-bec9-4522-a2d1-b235372276e6

90b03550-aa91-482f-bb9e-04d567410e3e

542d02ee-80cd-4250-ad41-01de5e86ee8b

64529736-617a-425c-9991-1d7c5f5def40

c1a1c3ca-3c23-4102-abff-9db1e22a365f

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்