திருமலையில் உலர்த்தப்பட்ட  ஆமை இறைச்சி,டொல்பின் மீன் கருவாடு ஆகியவற்றுடன் 7 பேர் கைது

திருமலையில் உலர்த்தப்பட்ட  ஆமை இறைச்சி,டொல்பின் மீன் கருவாடு ஆகியவற்றுடன் 7 பேர் கைது

திருமலையில் உலர்த்தப்பட்ட  ஆமை இறைச்சி,டொல்பின் மீன் கருவாடு ஆகியவற்றுடன் 7 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

01 May, 2016 | 1:12 pm

திருகோணமலை கோட்டை பகுதியில் உலரத்தப்பட்ட 120 கிலோகிராம் ஆமை இறைச்சி மற்றும் டொல்பின் மீன் கருவாடு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து நேற்றிரவு 8.30 அளவில் இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை திருகோணமலை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்