இன்று சர்வதேச தொழிலாளர் தினம்

இன்று சர்வதேச தொழிலாளர் தினம்

இன்று சர்வதேச தொழிலாளர் தினம்

எழுத்தாளர் Staff Writer

01 May, 2016 | 8:04 am

உயிரை பணயமாக வைத்து வென்றெடுத்த உரிமைகளை பாதுகாப்பதற்கும், தாங்கள் எதிர்நோக்கும் சவால்களை முறியடிக்கும் நோக்கில் உலகளாவிய ரிதீயிலுள்ள மக்கள் இன்று சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடுகின்றனர்.

இலங்கையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் 20 இற்கும் மேற்பட்ட கூட்டங்களும் , மே தின ஊர்வலங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பேரணி இரண்டு கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது.

பின்னதுவ அதிவேக வீதியின் நுழைவாயிலுக்கு அருகிலிருந்து காலி நோக்கியும், மஹமோதர வைத்தியசாலைக்கு அருகில் இருந்து கொழும்பு – மாத்தறை – காலி வீதி ஊடாக சமனல மைதானத்திற்கு இந்த பேரணி பயணிக்கவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலி சமனல மைதானத்தில் இன்று (01) பிற்பகல் ஒரு மணிக்கு மே தினக்கூட்டம் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மேதின பேரணி மாளிகாவத்தை பிரதீபா மாவத்தைக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டு பொரள்ளை கெம்பல் மைதானத்தில் நிறைவு பெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பொரள்ளை கெம்பல் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு மே தினக்கூட்டம் நடைபெறவுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் மே தின பேரணி தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க மைதானத்திற்கு அருகில் ஆரம்பமாகவுள்ளது.

ஹெவ்லொக் டவுன், பீ.ஆர்.சீ மைதானத்தில் மேதினக் கூட்டம் நடைபெறவுள்ளது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தலைமையிலான ஜனநாயகக் கட்சி, ராஜகிரியவில் மேதினப் பேரணியை ஆரம்பித்து, பத்தரமுல்ல புத்ததாச மைதானத்தில் கூட்டத்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதத்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகள் சிலரும் கிருலப்பனை சந்தியில் நடத்தவுள்ள மே தினக்கூட்டத்தில் இணைவதற்கான பேரணியை நாராஹேன்பிட்டியில் நடத்தவுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்