இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மீண்டும் வலியுறுத்தல்

இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மீண்டும் வலியுறுத்தல்

இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மீண்டும் வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

01 May, 2016 | 1:22 pm

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 34 இந்திய மீனவர்களையும் அவர்களின் 88 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சர்வதேச கடல் எல்லை என்பது முடிந்து விட்டதாக மத்திய அரசு கருத கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு எனவும் தமிழக முதல்வர் வலியுறுத்தியிள்ளார்.

நீண்டகாலமாக இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ள நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தனது கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்திய மீனவர்களின் படகுகள் ,மீன்பிடி உபகரணங்கள் மற்றும் தடுப்பிலுள்ள மீனவர்களையும் விடுதலை செய்ய விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்