வடமராட்சி கிழக்கில் பஸ் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு

வடமராட்சி கிழக்கில் பஸ் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு

வடமராட்சி கிழக்கில் பஸ் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Apr, 2016 | 12:04 pm

வடமராட்சி கிழக்கில் பஸ் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். நாகர்கோவில் பகுதியில் தனியார் பஸ் நடத்துனர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து பணிபகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மருதங்கேணியிலிருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பஸ்களினதும், ஊழியர்கள் இன்று (30) காலை முதல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

தனியார் பஸ்ஸில் நேற்றிரவு இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தனியார் பஸ்ஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்