பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது – பிரதமர் ரணில் விக்ரமசிங்க

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது – பிரதமர் ரணில் விக்ரமசிங்க

எழுத்தாளர் Bella Dalima

30 Apr, 2016 | 6:05 pm

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இந்த விடயத்தைக் கூறினார்.

எல்.ரி.ரி.ஈ.யினருக்கு மீண்டும் பயங்கரவாதத்தை முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அதுகுறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்