நீதிமன்ற தடை உத்தரவை மீறி சாலிகா மைதானத்திற்குள் பிரவேசிக்க எதிர்பார்க்கவில்லை

நீதிமன்ற தடை உத்தரவை மீறி சாலிகா மைதானத்திற்குள் பிரவேசிக்க எதிர்பார்க்கவில்லை

நீதிமன்ற தடை உத்தரவை மீறி சாலிகா மைதானத்திற்குள் பிரவேசிக்க எதிர்பார்க்கவில்லை

எழுத்தாளர் Staff Writer

30 Apr, 2016 | 7:15 am

நீதிமன்ற தடை உத்தரவை மீறி நாராஹென்பிட்ட சாலிகா மைதானத்திற்குள் பிரவேசிக்க எதிர்பார்க்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற தடை உத்தரவு பொலிஸாரினூடாக நேற்று தனக்கு கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் கிருலப்பனையில் ஏற்பாடு செய்திருக்கும் மே தினக் கூட்டத்தை நடத்துவதற்கு நீதிமன்றத்தால் எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை எனவும் தனக்கு கிடைத்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளவாறு கிருலப்பனையில் மே தினக் கூட்டம் நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு அமைய பேஸ்லைன் வீதியூடாக பொல்ஹேன்கொட சந்திக்கு சென்று அங்கிருந்து கிருலப்பனையூடாக ஹைலெவல் வீதிக்கு சென்று தங்களின் மேதின ஊர்வலத்தை நடத்தவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்