தெற்காசியாவின் புலனாய்வு செய்தி அறிக்கையிடலுக்கான விருதை சுவீகரித்தது நியூஸ்பெஸ்ட் 

தெற்காசியாவின் புலனாய்வு செய்தி அறிக்கையிடலுக்கான விருதை சுவீகரித்தது நியூஸ்பெஸ்ட் 

தெற்காசியாவின் புலனாய்வு செய்தி அறிக்கையிடலுக்கான விருதை சுவீகரித்தது நியூஸ்பெஸ்ட் 

எழுத்தாளர் Bella Dalima

30 Apr, 2016 | 10:17 pm

பிரித்தானியாவின் தொம்ஸன் மன்றம் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த புலனாய்வு ஊடகவியலாளர்களை கௌரவித்து விருது வழங்கும் விழா இன்று (30) மாலை கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது, தெற்காசியாவின் புலனாய்வு செய்தி அறிக்கையிடல் ஊடகவியலாளருக்கான விருதினை நியூஸ்பெஸ்ட் சுவீகரித்தது.

தெற்காசியாவின் புலனாய்வு ரீதியான செய்தி அறிக்கையிடலுக்கான மூன்று விருதுகளில் ஒன்று நியூஸ்பெஸ்டின் “விமர்ஷன” விவரண செய்தி அறிக்கையிடல் ஊடாக பாடசாலை சீருடை தொடர்பில் ஔிபரப்பான அறிக்கையிடலுக்காக வழங்கப்பட்டது.

நியூஸ்பெஸ்ட் “விமர்ஷன” விவரண செய்தி அறிக்கையிடலின் முகாமையாளர் துசித்த பிட்டிகல சார்பாக இந்த விருதை நியூஸ்பெஸ்டின் அஷேன் தாரக பெற்றுக்கொண்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்