சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை நாடு பூராகவும் 16 மேதினக் கூட்டங்கள் 

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை நாடு பூராகவும் 16 மேதினக் கூட்டங்கள் 

எழுத்தாளர் Bella Dalima

30 Apr, 2016 | 10:28 pm

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பேரணி இரண்டு கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது.

பின்னதுவ அதிவேக வீதியின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்து காலி நோக்கியும், மஹமோதர வைத்தியசாலைக்கு அருகில் இருந்து கொழும்பு – மாத்தறை – காலி வீதி ஊடாக சமனல மைதானத்திற்கும் இந்தப் பேரணி பயணிக்கவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலி சமனல மைதானத்தில் மே தினக்கூட்டம் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினப் பேரணி மாளிகாவத்தை பிரதீபா மாவத்தைக்கு அருகில் ஆரம்பித்து பொரளை கெம்பல் மைதானத்தில் நிறைவு பெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக்கூட்டம் நடைபெறவுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் மே தினப் பேரணி தெஹிவளை எஸ்.டி.எஸ். ஜயசிங்க மைதானத்திற்கு அருகில் ஆரம்பமாகவுள்ளது.

ஹெவ்லொக் டவுன் பீ.ஆர்.சீ. மைதானத்தின் மேதினக்கூட்டம் நடைபெறவுள்ளது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தலைமையிலான ஜனநாயகக் கட்சி, ராஜகிரியவில் மே தினப் பேரணியை ஆரம்பித்து, பத்தரமுல்ல புத்ததாச மைதானத்தில் மே தினக் கூட்டத்தை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதத்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலரும் கிருலப்பனை சந்தியில் நடத்தவுள்ள மே தினக்கூட்டத்தில் இணைவதற்கான பேரணியை நாரஹேன்பிட்டி ஷாலிக்கா மைதானத்திற்கு அருகில் ஆரம்பிக்கவுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்