குவாத்தமாலாவில் பாரிய குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு 24 பேரைக் காணவில்லை

குவாத்தமாலாவில் பாரிய குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு 24 பேரைக் காணவில்லை

குவாத்தமாலாவில் பாரிய குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு 24 பேரைக் காணவில்லை

எழுத்தாளர் Staff Writer

30 Apr, 2016 | 1:23 pm

குவாத்தமாலாவில் பாரிய குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததையடுத்து 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காணாமற்போயுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய 15 பேர் குப்பைக் கூழங்களில் இருந்து உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காணாமற்போனவர்களில் 7 சுத்திகரிப்பு பணியாளர்கள் அடங்குவதாக அந்நாட்டு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனையவர்கள் அந்த பகுதிக்குள் சட்டவிரோதமாக உட்பிரவேசித்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காணாமற்போனோரை தேடும் பணிகள் துரிதப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்