கிளிநொச்சியில் மலசலக்கூட குழியொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

கிளிநொச்சியில் மலசலக்கூட குழியொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Apr, 2016 | 5:58 pm

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் தனியார் காணியொன்றிலுள்ள மலசலக்கூட குழியொன்றிலிருந்து வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

நேற்று (29) முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது சில வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் ஜயநாத் ஜெயவீர குறிப்பிட்டார்.

40 மில்லிமீற்றர் அளவிலான 21 சிறியரக குண்டுகளும் கைக்குண்டுகளும் துப்பாக்கிகளும் இதன்போது மீட்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

பரந்தன் ஏ – 35 வீதியில் 6 ஆம் ஒழுங்கை பகுதியில் இந்த மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தனியார் காணி ஒன்றை துப்புரவு செய்யும் போது மலசலக்கூட குழியொன்றிலிருந்து வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் காணப்பட்டதை அடுத்து, வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இராணுவத்தினரால் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

யுத்தகாலப் பகுதியில் எல்.ரீ.ரீ.ஈ யினரினால் குழியில் இந்த வெடிபொருட்கள் போடப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மீட்கப்பட்ட ஆயுதங்கள் பாவிக்கமுடியாத நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்