கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காயம்

கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காயம்

கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

30 Apr, 2016 | 12:52 pm

கல்முனை மருதமுனை பகுதியில் வீடடொன்றுக்குள் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்களும் ஆண்ணொருவரும் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

இந்த வாள்வெட்டுத் தாக்குதல் இன்று (30) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்