கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் சிறந்த நிறைவேற்று அதிகாரியாக சுமித் குமார தெரிவு

கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் சிறந்த நிறைவேற்று அதிகாரியாக சுமித் குமார தெரிவு

கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் சிறந்த நிறைவேற்று அதிகாரியாக சுமித் குமார தெரிவு

எழுத்தாளர் Staff Writer

29 Apr, 2016 | 6:51 pm

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் 39 ஆவது வருடாந்த மாநாடு இரத்மலானை ஸ்டைன் கலையரங்கில் நடைபெறுகின்றது.

இன்று (29) மாலை ஆரம்பமான இந்த மாநாட்டின் பிரதம விருந்தினராக நிதி அமைச்சர் கருணாநாயக்க கலந்துகொண்டிருந்தார்.

மதத்தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் விசேட விருந்தினர்கள் உள்ளிட்ட பலர் வருடாந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.

2015 ஆம் ஆண்டின் சிறந்த நிறைவேற்று அதிகாரியை தெரிவு செய்வதே வருடாந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் பல்வேறு துறைகளின் ஊடாக, இலங்கையர்களுக்கு பல சேவைகளை வழங்கும் நிறைவேற்று அதிகாரிகள் வருடாந்தம் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டின் சிறந்த நிறைவேற்று அதிகாரியை தெரிவு செய்வதற்காக ஐவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

அவர்களுள் 2015 ஆம் ஆண்டின் சிறந்த நிறைவேற்று அதிகாரியாக PE+ பொதுமுகாமையாளர் சுமித் குமார தெரிவு செய்யப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்