சாலிந்த திஸாநாயக்க, கீதா குமாரசிங்க தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்

சாலிந்த திஸாநாயக்க, கீதா குமாரசிங்க தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2016 | 11:15 am

சாலிந்த திஸாநாயக்க மற்றும் கீதா குமாரசிங்க ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சாலிந்த திஸாநாயக்க தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட ஹிரியால தொகுதியின் புதிய அமைப்பாளராக வடமேல் மாகாண சபை உறுப்பினர் கமல் இந்திக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கீதா குமாரசிங்ஹ தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட பெந்தர எல்பிட்டிய தொகுதிக்கான இணை அமைப்பாளர்களாக பெந்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கயான் கிருஷான் ஸ்ரீமான்ன மற்றும் எல்பிட்டிய பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அமில ஹர்ஷன காரியவசம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய தொகுதி அமைப்பாளர்கள் 11 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செலயகத்தில் இன்று நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

கம்பஹா மாவட்டத்தின் புதிய அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரனான பிரதீப் ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட இணை அமைப்பாளர்களாக மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் காமினி டி சில்வா மற்றும் புத்திக்க இந்தமல்கொட ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்டத்தின் அமைப்பாளராக மனுல சமல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

காலி மாவட்டத்தின் அமைப்பாளராக பிஹல் தர்ஷன குருகேவும் கேகாலை மாவட்டத்தின் அமைப்பாளராக நலின் புஷ்பகுமாரவும் குருணாகல் மாவட்ட அமைப்பாளராக துஷார திலகரட்ணவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்