வௌிநாட்டு மதுபான போத்தல்களுடன் 5 சந்தேகநபர்கள் பலாங்கொட பகுதியில் கைது

வௌிநாட்டு மதுபான போத்தல்களுடன் 5 சந்தேகநபர்கள் பலாங்கொட பகுதியில் கைது

வௌிநாட்டு மதுபான போத்தல்களுடன் 5 சந்தேகநபர்கள் பலாங்கொட பகுதியில் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2016 | 1:18 pm

வௌிநாட்டு மதுபான போத்தல்களுடன் 5 சந்தேகநபர்கள் பலாங்கொட பகுதியில் கலால் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி சிகரெட் வகைகளும் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக கலால் திணைக்கள அத்தியட்சகர் பிரபாத் ஜெயவிக்ரம தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பலாங்கொடை பகுதிக்கு இவை எவ்வாறு கொண்டுசெல்லப்பட்டுள்ளது என்பது தொடர்பில் சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்டுள்ள மதுபானம் மற்றும் போலி சிகரெட்டுக்களின் பெறுமதி மூன்றறை இலட்சம் ரூபா எனவும் கலால் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

கிடைத்த தகவலுக்கு அமைய வர்த்தக நிலையமொன்றை சுற்றிவளைத்த போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

வேறு உணவுப் பொருட்களுடன், மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டு இந்த மதுபான வகைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கலால் திணைக்கள அத்தியட்சகர் பிரபாத் ஜெயவிக்ரம தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்