வட மாகாண சபையின் சமஷ்டி பிரேரணையை நிராகரிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவிப்பு

வட மாகாண சபையின் சமஷ்டி பிரேரணையை நிராகரிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவிப்பு

வட மாகாண சபையின் சமஷ்டி பிரேரணையை நிராகரிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2016 | 1:11 pm

வட மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட வடக்கு கிழக்கை இணைப்பதற்கான சமஷ்டி பிரேரணையை நிராகரிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இனங்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் பிரேரணைகளுக்கும், சமாதானத்தை சீர்குழைக்க முயற்சிக்கும் எந்தவொரு பிரேரணைக்கும் மக்கள் விடுதலை முன்னணி தமது ஒத்துழைப்பை வழங்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

மக்களுடன் இணைந்து செயற்படுவதே மக்கள் விடுதலை முன்னணியின் நோக்கம் எனவும் இந்த ஊடகவியலளார் சந்திப்பின் போது கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்