மாலபே மருத்துவக் கல்லூரியை இரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்: பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் 

மாலபே மருத்துவக் கல்லூரியை இரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்: பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் 

எழுத்தாளர் Bella Dalima

28 Apr, 2016 | 3:42 pm

மாலபே மருத்துவக் கல்லூரியை இரத்து செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி எதிர்ப்புப் பேரணியில் ஈடுபட்ட மருத்துவ பீட மாணவர்கள் மீது  பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

கொழும்பு மருத்துவப் பீடத்திற்கு அருகிலிருந்து ஆரம்பமான எதிர்ப்புப் பேரணி, லோட்டஸ் சுற்றுவட்டத்தை அண்மித்தபோது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் நடத்தப்பட்டது.

மாலபே மருத்துவக் கல்லூரி உட்பட கல்வியைத் தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக மாணவர்கள் ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டம் 100 நாட்கள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு இந்த எதிர்ப்புப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்