பாலியல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்களின் விபரங்களை வெளியிட இந்திய அரசு திட்டம்

பாலியல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்களின் விபரங்களை வெளியிட இந்திய அரசு திட்டம்

பாலியல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்களின் விபரங்களை வெளியிட இந்திய அரசு திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

28 Apr, 2016 | 5:05 pm

பாலியல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட விபரங்களை பதிவுப்பட்டியலாக வெளியிட இந்திய அரசு திட்டமொன்றை உருவாக்கி வருகிறது.

தேசிய அளவிலான இந்தப் பதிவுப்பட்டியல் ஆவணத்தில் பாலியல் வல்லுறவு, பலாத்காரம், மறைந்திருந்து பார்ப்பது, பின்னால் சென்று தொல்லை கொடுப்பது உள்ளிட்ட எல்லாவிதமான பாலியல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்களின் புகைப்படம், பெயர், முகவரி அனைத்தும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டிக்கப்பட்ட 18 வயதிற்குட்பட்டவர்களின் விபரங்களும் கூட இதில் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கான செயற்திட்டம் ஆரம்ப நிலையில் இருப்பதாகவும், இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் தலைநகர் டில்லியில் ஒரு மாணவி கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் போது இந்த யோசனை முதலில் முன்வைக்கப்பட்டது.

குறித்த பாலியல் கொலைச் சம்பவம் இந்தியாவில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக தேசிய அளவில் மிகப்பெரிய கொந்தளிப்பைத் தோற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Source: BBC


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்