பல்ராம் நாயுடுவாக மீண்டும் நடிக்கிறார் கமல்!

பல்ராம் நாயுடுவாக மீண்டும் நடிக்கிறார் கமல்!

பல்ராம் நாயுடுவாக மீண்டும் நடிக்கிறார் கமல்!

எழுத்தாளர் Bella Dalima

28 Apr, 2016 | 3:53 pm

டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் கமலும் ஸ்ருதி ஹாசனும் நடிக்க உள்ள படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

”மீண்டு வருவது யாரென்று தெரிகிறதா” என்கிற விளம்பர வாசகம் படத்தின் முதல் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

கமல் ஏற்கனவே நடித்த ஒரு கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் மறு உருவாக்கம் செய்ய உள்ளதாகச் சொல்லப்பட்டது. தற்போது அந்தப் புதிருக்கான விடை கிடைத்துள்ளது.

தசாவதாரம் படத்தில் இடம்பெற்ற பல்ராம் நாயுடு கதாப்பாத்திரத்தில் மீண்டும் நடிக்க உள்ளார் கமல். பல்ராம் நாயுடுவின் குடும்பம் இந்தக் கதையில் இடம்பெற்றுள்ளது. முழுக்க முழுக்க நகைச்சுவை கதாப்பாத்திரங்களுடன் ஆக்‌ஷன் காட்சிகளும் படத்தில் உள்ளன.

மே 2 ஆம் வாரம் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் பெரும்பாலான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கமல், ஸ்ருதியுடன் பிரம்மானந்தம், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் நடிக்க உள்ளார்கள். கமலின் மனைவியாக ரம்யா கிருஷ்ணனும் மகளாக ஸ்ருதி ஹாசனும் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

1989 இல் டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் சாணக்கியன் என்கிற படத்தில் நடித்தார் கமல். இப்போது 26 வருடங்கள் கழித்து மீண்டும் ராஜீவ் குமாருடன் இணைகிறார் கமல்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்