தமிழக சட்டமன்றத் தேர்தல்: சொத்து விபரங்களுடன் வேட்பு மனு தாக்கல்

தமிழக சட்டமன்றத் தேர்தல்: சொத்து விபரங்களுடன் வேட்பு மனு தாக்கல்

தமிழக சட்டமன்றத் தேர்தல்: சொத்து விபரங்களுடன் வேட்பு மனு தாக்கல்

எழுத்தாளர் Bella Dalima

28 Apr, 2016 | 6:24 pm

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்றைய தினமும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் நடவடிக்கை நாளையுடன் நிறைவடையவுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் 233 பேர் இன்று ஒரே நாளில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் இன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

தமிழிசை சௌந்தரராஜன் சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ததோடு தனக்கு 4 கோடியே 13 இலட்சத்து 83 ஆயிரத்து 988 ரூபாய் சொத்துக்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உளுந்தூர்பேட்டையில் போட்டியிடும் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் விஜயகாந்த், தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்ததோடு தனக்கு 26 கோடியே 97 இலட்சத்து 92 ஆயிரத்து 221 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தேர்தல் ஆணையகத்திடம் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்