காணாமற்போனோர் தொடர்பான விசாரணையின் கிளிநொச்சி அமர்வு இன்றுடன் நிறைவு

காணாமற்போனோர் தொடர்பான விசாரணையின் கிளிநொச்சி அமர்வு இன்றுடன் நிறைவு

காணாமற்போனோர் தொடர்பான விசாரணையின் கிளிநொச்சி அமர்வு இன்றுடன் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2016 | 6:55 am

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வட மாகாணத்திற்கான இறுதிக்கட்ட சாட்சி விசாரணை அமர்வுகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன.

இறுதிக்கட்ட சாட்சி விசாரணை அமர்வுகள் கடந்த 25 ஆம் திகதி முதல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றன.

கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் கடந்த மூன்று நாட்களாக சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.

பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்நத மக்களின் சாட்சியங்கள் நான்காம் நாளான இன்று பதிவுசெய்யப்படவுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவித்தார்.

இன்றைய தினம் சாட்சியமளிப்பதற்காக சுமார் 140 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் கூறினார்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான அமர்வில் கடந்த மூன்று நாட்களாக சுமார் 800பேரிடம் இதுவரை சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

சாட்சி விசாரணைகளுக்கு, தூர இடங்களிலிருந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு வருவோருக்கான விசேட பஸ் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்