இலவச மருத்துவ சேவையூடாக கூடுதல் சேவைகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை

இலவச மருத்துவ சேவையூடாக கூடுதல் சேவைகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை

இலவச மருத்துவ சேவையூடாக கூடுதல் சேவைகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2016 | 9:04 am

இலவச மருத்துவ சேவையூடாக மக்களுக்கு வழங்கக் கூடிய வசதிகளை மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

2016 ஆம் உலக மருத்துவ ஆய்வுகூட தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார மற்றும் மருத்துவ துறையில் ஏற்படுகிற்ன மாற்றங்கள் மற்றும் துறைசார் அபிவிருத்திகள், தரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தாம் திருப்தி அடைவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான சலுகைகள் மற்றும், வரப்பிரசாதங்களை வழங்குவதற்கும் அரசாங்கம் ஒருபோது தயங்குவதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இலவச சுகாதார சேவையை வலுப்படுத்தும் போது அதனூடாக மக்களுக்கு வழங்கும் சலுகைகளை அபிவிருத்தி, மருத்துவ இரசாயன சேவையை மேலும் தரமுயர்த்துவதற்காக சுகாதார அமைச்சினூடாக அரசாங்கம் தொடர்ந்தும் அர்பணிப்புடன் செயற்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்