அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் ட்ரம்ப், ஹிலரி அமோக வெற்றி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் ட்ரம்ப், ஹிலரி அமோக வெற்றி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் ட்ரம்ப், ஹிலரி அமோக வெற்றி

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2016 | 9:43 am

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் 5 மகாணங்களிலும் ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றுள்ளார். இதேவேளை ஹிலரி 4 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதற்கான வேட்பாளர் தேர்தல் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஜனநாயக கட்சியில் ஹிலரி கிளிண்டனும், குடியரசு கட்சியில் டொனால்ட் ட்ரம்பும் முன்னணியில் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று கனெக்டிகட், டெலாவர், மேரிலேண்ட், பென்சில் வேனியா, ரோத் ஐலண்டு ஆகிய 5 மாகாணங்களில் கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டும் தேர்தல் இடம்பெற்றது.

இத்தேர்தலில் ட்ரம்ப் வெற்றியை தடுக்க அவரை எதிர்த்து போட்டியிடும் டெட் குரூஸ், ஜெயின் காசிக் ஆகியோர் கூட்டணி அமைத்து இருந்தனர். இருந்தும் நேற்றைய தினம் தேர்தல் இடம்பெற்ற 5 மாகாணங்களிலும் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் வேட்பாளர் தேர்வில் பெற வேண்டிய 1237 பிரதிநிதிகளின் வாக்குகளை நெருங்கி விட்டார். எனவே, குயடிரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நான் தான் என அறிவித்து கொண்டார்.

இதேவேளை 5 மாகாண தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் 4 மாகாணங்களில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸ் ரோத் ஐலேண்டில் மட்டும் வென்றார்.

இதன் மூலம் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலரி கிளிண்டன் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்