கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

GSP சலுகையை மீண்டும் இலங்கை பெற்றுக்கொள்ள சுவீடன் ஒத்துழைப்பு

GSP சலுகையை மீண்டும் இலங்கை பெற்றுக்கொள்ள சுவீடன் ஒத்துழைப்பு

எழுத்தாளர் Bella Dalima

26 Apr, 2016 | 9:33 pm

GSP சலுகையை மீண்டும் இலங்கைக்குப் பெற்றுக்கொள்ள அதிகபட்ச ஒத்துழைப்பு வழங்குவதாக சுவீடன் வௌிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள சுவீடன் வௌிவிவகார அமைச்சர் மார்கட் வால்ஸ்ட்ரம் (Margot Wallström)  ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

சுவீடன் வௌிவிவகார அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை மற்றும் சுவீடன் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுவூட்டுவது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் சிறுநீரகப் பாதிப்பைத் தடுப்பதற்குத் தேவையான ஆய்வுகளை முன்னெடுப்பதற்காக சுவீடன் அரசாங்கத்தின் உதவியைப் பெற்றுத்தருமாறு இதன்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டு மக்களின் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை உறுதிசெய்து, யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்புகளை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை சுவீடன் வௌிவிவகார அமைச்சர் இதன்போது பாராட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்