விசுவமடுவில் இராணுவமுகாமுள்ள தனியார் காணியின் அளவீடு மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

விசுவமடுவில் இராணுவமுகாமுள்ள தனியார் காணியின் அளவீடு மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

26 Apr, 2016 | 9:45 pm

முல்லைத்தீவு – விசுவமடு, தொட்டியடிப் பகுதியில் இராணுவ முகாம் அமைந்துள்ள தனியார் காணியை அளவீடு செய்யும் நடவடிக்கை மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.

விசுவமடு பகுதியில் இராணுவ முகாம் அமைந்துள்ள தனியார் காணியை அளவீடு செய்வதற்காக நில அளவையாளர்கள் சென்றிருந்தனர்.

இந்த நிலையில், இராணுவ முகாம் அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.

காணி அளவீடு செய்யும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பை வௌிப்படுத்திய சந்தர்ப்பத்தில், குறித்த இராணுவ முகாமின் அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்