லக்கல பொலிஸ் நிலையத்தில் ஆயுதங்கள் திருடப்பட்டமை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை

லக்கல பொலிஸ் நிலையத்தில் ஆயுதங்கள் திருடப்பட்டமை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை

லக்கல பொலிஸ் நிலையத்தில் ஆயுதங்கள் திருடப்பட்டமை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

26 Apr, 2016 | 1:14 pm

லக்கல பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி காணாமற்போன சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கபடுகின்றது.

தொலைபேசி உரையாடல் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கபடுவதாக குற்றப்பிலனாய்வுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்ற தினத்தில் இரவில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மது போதையில் இருந்தார்களா என்பதனை உறுதி செய்து கொள்வதற்கு அவர்களின் இரத்த மாதிரியை அரச இரசாயண பகுப்பாய்வு அதிகாரிக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது.

அந்த அறிக்கை இதுவரை கிடைக்கபெறவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கி காணாமற்போன அன்று இரவு கடமையில் இருந்த 3 பொலிஸார் நேற்று கொழும்புக்கு வரவழைத்து பல மணி நேரம் அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்