யாழில் சிவில் சமூக பிரதிநிதிகளைச் சந்தித்து சுவீடன் தூதுக்குழுவினர் கலந்துரையாடல்

யாழில் சிவில் சமூக பிரதிநிதிகளைச் சந்தித்து சுவீடன் தூதுக்குழுவினர் கலந்துரையாடல்

எழுத்தாளர் Bella Dalima

26 Apr, 2016 | 9:40 pm

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள சுவீடன் வௌிவிவகார அமைச்சர் மார்கட் வால்ஸ்ட்ரம் (Margot Wallström) இன்று வடக்கிற்கு விஜயம் செய்தார்.

சுவீடன் வௌிவிவகார அமைச்சர், இலங்கைக்கான சுவீடன் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 10 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்தனர்.

மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சுவீடன் தூதுக்குழுவினருக்கு இடையிலான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அதன் பின்னர் யாழ். மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து சுவீடன் தூதுக்குழுவினர் கலந்துரையாடினர்.

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் சுவீடன் தூதுக்குழுவினருக்கு இடையிலான இந்தக் கலந்துரையாடல் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பின்னர், கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்திற்கு சென்ற தூதுக்குழுவினர் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனைச் சந்தித்தனர்.

அதன் பின்னர், 65 ஆயிரம் பொருத்து வீட்டுத்திட்டத்தின் கீழ், உடும்பிராய் பகுதியில் அமைக்கப்படும் வீடுகளையும் தூதுக்குழுவினர் பார்வையிட்டனர்.

இதன்போது, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதனும் அவர்களின் விஜயத்தில் இணைந்துகொண்டார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்