தமிழகத்திலிருந்து 20 பேர் இன்று தாயகம் திரும்பியுள்ளனர்

தமிழகத்திலிருந்து 20 பேர் இன்று தாயகம் திரும்பியுள்ளனர்

தமிழகத்திலிருந்து 20 பேர் இன்று தாயகம் திரும்பியுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

26 Apr, 2016 | 12:51 pm

யுத்தகாலத்தின் போது இலங்கையிலிருந்து வெளியேறி, தமிழகத்தில் தஞ்சமடைந்தவர்களில் 20 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.

விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (26) காலை இலங்கையை வந்தடைந்ததாக மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சென்னையிலுள்ள அகதி முகாமிலிருந்தே இவர்கள் 20 பேரும் வருகை தந்துள்ளனர்.

10 ஆண்களும் 10 பெண்களுமே நாடு திரும்பியுள்ளனர்.

தாயகம் திரும்பியுள்ளவர்களை திருகோணமலை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் மீள்குடியமர்த்துவதற்கான ஏற்படுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராயலத்தினூடாக இவர்களுக்கான இலவச விமானச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்