தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு தளர்வு

தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு தளர்வு

தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு தளர்வு

எழுத்தாளர் Staff Writer

26 Apr, 2016 | 1:01 pm

முல்லைத்தீவு கொக்கிலாய் களப்பில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஷ்வரன் தெரிவித்துள்ளார்.

மீனவர்களன் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் நேற்று மேற்கொள்ளப்பட்டதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைக்கு பதிலாக மாற்று நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு கொக்கிலாய் மீனவர்கள் கால அவகாசம் கோரியுள்ளனர்.

அதற்கமைய மீனவர் பிரச்சினை குறித்து ஆராய்வதற்கு மாவட்ட ரீதியில் ஸ்தாபிக்கப்பட்ட நல்லாட்சி குழுவின் நேற்றைய ஒன்று கூடலின் போது கொக்கிலாய் மீனவர்களின் கோரிக்கை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபர் கூறியுள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு மாற்று நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும், அதுவரையில் தற்போது முன்னெடுக்கும் முறையில் மீன்பிடியில் ஈடுபட முடியும் எனவும் மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதிஷ்வரன் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்