சுவீடன் ​வெளிவிவகார அமைச்சர் இன்று வடக்கிற்கு விஜயம்

சுவீடன் ​வெளிவிவகார அமைச்சர் இன்று வடக்கிற்கு விஜயம்

சுவீடன் ​வெளிவிவகார அமைச்சர் இன்று வடக்கிற்கு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

26 Apr, 2016 | 6:37 am

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள சுவீடன் ​வெளிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ட்ஸ்ரம் (Margot Wallström) இன்று வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

வடக்கிற்று விஜயம் செய்யவுள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சர் , வட மாகாண ஆளுநர், முதலமைச்சர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரை சந்தித்து கலந்தரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது நலன்புரி முகாம்களிற்கும் செல்லவுள்ளதுடன், சிவில் அமைப்புகளை சந்திக்கவுள்ளதுடன், மறவன்புலவு வீட்டுத் திட்டத்தையும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கண்காணிக்கவுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முந்தினம் நாட்டை வந்தடைந்த சுவீடன் வெளிவிவகார அமைச்சர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை நேற்று சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

சுவீடன் அமைச்சரின் இந்த விஜயத்தினூடாக , இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வுள்ளதுடன், வர்த்தக துறையிலான ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்த எதிர்ப்பார்ப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகருடனும் சூவிடன் வெளிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ட்ஸ்ரம் உத்தியோகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்