கோரம் இன்மையால் கிழக்கு மாகாண சபை அமர்வு இரண்டு தடவைகள் ஒத்திவைப்பு

கோரம் இன்மையால் கிழக்கு மாகாண சபை அமர்வு இரண்டு தடவைகள் ஒத்திவைப்பு

எழுத்தாளர் Bella Dalima

26 Apr, 2016 | 9:56 pm

கிழக்கு மாகாண சபை கோரம் இன்மையினால் இன்று இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண சபை இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமான போதிலும் ஆளுங்கட்சியின் 5 உறுப்பினர்களும், எதிர்கட்சியின் 3 உறுப்பினர்களுமே சபையில் பிரசன்னமாகியிருந்தனர்.

கோரம் இன்மையினால் காலை 10.30 மணிவரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் சபை அமர்வு ஆரம்பமானது.

இன்றைய தினம் 12 தனிநபர் பிரேரணைகள் சபையில் சமர்பிக்கப்படும் என இன்றைய நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சம்பூர் அனல் மின் நிலையத்தை நிராகரிக்குமாறு கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஷ்வரன் தனிநபர் பிரேரணையொன்றை கொண்டுவரவிருந்த போதிலும் அந்தப் பிரேரணை இன்று சமர்பிக்கப்படவில்லை.

மதிய போசன இடைவேளையின் பின்னர் பிற்பகல் 2.45 அளவில் மாகாண சபை அமர்வு மீண்டும் ஆரம்பமான போது ஆளுங்கட்சியில் 5 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியின் 2 உறுப்பினர்களுமே சபையில் பிரசன்னமாகியிருந்தனர்.

கோரம் இன்மையினால் சபை அமர்வு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதன்போது, உரையாற்றிய சபை முதல்வர் அடுத்த அமர்வில் மாகாண ஆளுநர் கலந்து கொள்ளவுள்ளதாகக் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்