பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம்: எண்ணெய் வளம் மிக்க நாடுகள் தவிர்ந்த 175 நாடுகள் கையெழுத்து

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம்: எண்ணெய் வளம் மிக்க நாடுகள் தவிர்ந்த 175 நாடுகள் கையெழுத்து

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம்: எண்ணெய் வளம் மிக்க நாடுகள் தவிர்ந்த 175 நாடுகள் கையெழுத்து

எழுத்தாளர் Bella Dalima

23 Apr, 2016 | 5:15 pm

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் 175 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

எவ்வாறாயினும், சவுதி அரேபியா, ஈராக், நைஜீரியா, கஜகஸ்தான் உள்ளிட்ட எண்ணெய் வளம் மிகுந்த நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

புவி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் இலக்கு.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உலகத் தலைவர்கள் புவி வெப்பமடைவதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்வின்போது பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன்,

[quote]நமக்கு நேரம் குறைவாக இருக்கிறது. விளைவுகள் பற்றி சற்றும் யோசிக்காமல் செய்யும் நுகர்வுக் கலாசாரம் முடிவுக்கு வர வேண்டும். இன்று இந்த ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திடுவதன் மூலம் எதிர்காலத்திற்கான புதிய உடன்படிக்கையை செய்து கொள்கிறோம்[/quote]

என்றார்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தமானது நடைமுறைக்கு வர வேண்டுமானால் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டுள்ள உலக நாடுகளில் 55 நாடுகளாவது இதில் இணைய வேண்டும்.

இந்த நிகழ்வு 2002 இல் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், பாரிஸ் மாநாட்டில் உலகத் தலைவர்கள் காட்டிய ஆர்வத்தை வைத்துப் பார்க்கும்போது இந்த ஆண்டு இறுதியிலேயே பாரிஸ் ஒப்பந்தம் நடைமுறைக்கு வர சாத்தியம் இருப்பதாகக் கூறப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்