VAT வரித் திருத்தம்: வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட நிவாரணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை

VAT வரித் திருத்தம்: வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட நிவாரணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை

VAT வரித் திருத்தம்: வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட நிவாரணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை

எழுத்தாளர் Staff Writer

20 Apr, 2016 | 12:41 pm

VAT வரித் திருத்தம் தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட நிவாரணங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

VAT வரித் திருத்தத்தினூடாக மின்சாரம் மற்றும் குடிநீர் தொடர்பில் மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டமைக்கு அமைய அவை தொடர்பான வரி திருத்தங்களை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுகாதார துறையில் ஔடதங்களை தவிர ஏனைய பிரிவுகளில் வரித் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

12 வீதமாக காணப்படும் வரியை குறைந்தபட்சம் 15 தொடக்கம் 20 வீதத்திற்குள் அதிகரிக்காவிடின் சுகாதார சேவையில் பணிப்புரிவோருக்கு இன்னும் சில வருடங்களில் மாதச் சம்பளத்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே VAT வரியில் திருத்தங்ளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுப்படுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்