வரிச்சுமைப் பொறியை உருவாக்கியது ஆச்சர்யத்தின் பிதா மகனே – சஜித் பிரேமதாச

வரிச்சுமைப் பொறியை உருவாக்கியது ஆச்சர்யத்தின் பிதா மகனே – சஜித் பிரேமதாச

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2016 | 10:05 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் அலரி மாளிகைக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களைச் சந்தித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க மே தினம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இதனையடுத்து, வரிச்சுமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச பின்வருமாறு பதிலளித்தார்,

[quote]மக்கள் மீது வரிச்சுமையை சுமத்தும் கண்ணிவெடியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே வடிவமைத்தார். பெறப்பட்ட அதிக வட்டிக்கடன் ஊடாக மக்களுக்கு பயன் தரும் திட்டங்களை முன்னெடுக்காது, அந்த நிதியை எவ்வாறு செலவளித்தார் என்பது எனக்குத் தெரியாது. 1,25,000 ரூபா தனிநபர் கடன் சுமையை, 4,75,000 ரூபாவாக மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் மாற்றியது. வரிச்சுமைப் பொறியை உருவாக்கியது ஆச்சர்யத்தின் பிதா மகனே.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்