வசீம் தாஜூடீன் கொலை: சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் சுமித் சம்பிக்க பெரேரா கைது

வசீம் தாஜூடீன் கொலை: சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் சுமித் சம்பிக்க பெரேரா கைது

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2016 | 5:42 pm

ரக்பி வீரர் வசீம் தாஜூடீனின் கொலை தொடர்பான சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வசீம் தாஜூடீனின் கொலை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்த விசாரணைகளின்போது சாட்சியங்களை மறைத்துள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபரான நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா நாளை (21) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்