ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் விடுதலை தொடர்பான கோரிக்கை இந்திய மத்திய அரசினால் நிராகரிப்பு

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் விடுதலை தொடர்பான கோரிக்கை இந்திய மத்திய அரசினால் நிராகரிப்பு

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் விடுதலை தொடர்பான கோரிக்கை இந்திய மத்திய அரசினால் நிராகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Apr, 2016 | 11:21 am

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது.

குற்றவாளிகள் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வருவதால் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மத்திய அரசின் கருத்தை கேட்டு தமிழக உள்துறை செயலகத்தினூடாக கடந்த மார்ச் 2 ஆம் திகதி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் , குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசின் கோரிக்கையை இரண்டாவது முறையாக மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக் குற்றவாளிகள் 7 பேரின் விடுதலை தொடர்பில் தமிழக அரசு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் மத்திய சட்டத்துறை அமைச்சின் கருத்தை கேட்டறிந்துள்ளதாகவும், தமிழக உள்துறை செயலாளர் ஞானதேசிகனுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளதாகவும் தி ஹிந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றவாளிகள் 7 பேரும் வேலூர் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புத்தூரில், லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கும், உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்பளித்தது.

இதன் பின்னர் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்