ராஜிவ் கொலை வழக்கு:   தமிழக அரசு விடுத்த எழுவரின் விடுதலை கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு 

ராஜிவ் கொலை வழக்கு:   தமிழக அரசு விடுத்த எழுவரின் விடுதலை கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு 

ராஜிவ் கொலை வழக்கு:   தமிழக அரசு விடுத்த எழுவரின் விடுதலை கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு 

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2016 | 5:30 pm

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் 7 பேரையும் விடுதலை செய்யுமாறு   தமிழக அரசு விடுத்த  கோரிக்கையை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதால் இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு தீர்மானித்தது

இந்த விடயம் தொடர்பில் மத்திய அரசின் கருத்தைக் கேட்டு தமிழக உள்துறை செயலகத்தினூடாக கடந்த மார்ச் 2 ஆம் திகதி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

எனினும் , இவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசின் கோரிக்கையை இரண்டாவது முறையாகவும் மத்திய அரசு நிராகரித்துள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.

7 பேரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக அரசு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் மத்திய சட்டத்துறை அமைச்சின் கருத்தைக் கேட்டறிந்ததாகவும், தமிழக உள்துறை செயலாளர் ஞானதேசிகனுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இவர்களை விடுதலை செய்வதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்